மின்சாரத்தடை திட்டமிட்ட சதி! பெற்றோர்கள் குற்றச்சாட்டு

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வட பகுதியில் மின்தடையை அமுல்படுத்துவது என்பது வேண்டும் என்றே செய்யப் படும் சதி வேலை என பெற் றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சை நடைபெறுகின்ற காலங்களில் மின்தடையை அமுல்படுத்தி அதன்மூலம் மாணவர்களின் பரீட்சை பெறு பேற்றை வீழ்ச்சியடையச் செய்கின்ற சதி வேலை தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள பெற்றோர்கள்,

இது தொடர்பில் வடக்கு மாகாண முதல மைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து மின்தடை ஏற்படுமாயின் மின்சார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உயர்தர பரீட்சைக்கு தோற் றும் மாணவர்களின் பெற்றோர் எச்சரித்து உள்ளனர்.