சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலியை அறுத்தவர் மாட்டியது எப்படி!!

வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த நபர், பெண்ணின் சாதுரியத்தால் மாட்டிக் கொண்டனர்.

இந்தச் சம்பவம் சுன்னாகம் சூறாவத்தைப் பகுதியில் நடந்துள்ளது.

வீதியால் குறித்த பெண் நடந்து சென்ற சமயம், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர், அவரது தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன் போது சங்கிலியைப் பறிகொடுத்த பெண் கூக்குரல் இட்டார்.

இதன் காரணமாக அவர் தப்பியோட வேண்டிய நிலமை ஏற்பட்டது. இருப்பினும் தங்கச் சங்கிலியை மீட்ட பெண் அவர்களை மடக்கிப் பிடிக்கவே முயன்றார். இதன் போது இளைஞனின் கைத்தொலைபேசி மீட்கப்பட்டது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த தொலைபேசியும் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் இளைஞன் பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.