யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரயில் மீது கிளிநொச்சியில் கற்கள் வீச்சு - ஒருவர் காயம்!!

யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்திலிருந்து இன்று இரவு ஏழு மணியளவில் பயணத்தை ஆழம்பித்த இரவு தபால் தொடருந்து கிளிநொச்சி தொடருந்து நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதில் பதொடருந்தின் கடைசிக்கு முதல் பெட்டியில் பயணித்த பயணியொருவர் இந்தக் கல்லெறி தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார்.

இதனையடுத்து தொடருந்து அவசர நிறுத்தல் பட்டி (பிறேக் லிவர்) இழுக்கப்பட்டு இரணைமடு உள் கிராமம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டது.

இதனால் அப் பகுதி கிராமம் மக்கள் அப் பகுதியில் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. எனினும் நடந்த சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து தொடருந்து தனது பயணத்தைத் தொடர்ந்ததுடன் காயமடைந்தவரை அடுத்த மாங்குளம் நிலையம் ஊடாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.