பருத்தித்துறை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருட்டு

ருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன் றில் திருட்டு இடம்பெற்றுள்ள தாக பருத்தித்துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகரின் நவீன சந்தைக்கு வடக்குப் பக்கமாக உள்ள குமாரி ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையத்திலேயே இத் திருட்டு இடம்பெற்றுள்ளது. 

நேற்று முன்தினம் வெள் ளிக்கிழமை இரவு வர்த்தக நிலையத்தினை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர் மறு நாளான நேற்று சனிக் கிழமை காலை வர்த்தக நிலைய த்தை திறக்க சென்றபோதே திருட்டு இடம்பெற்றமை தெரியவந்தது. 

வர்த்தக நிலையத்தின் கூரையினை கழற்றி உள் நுழைந்த திருடர்கள் அங்கி ருந்த சிகரெட், தொலைபேசி மீள்நிரப்பு அட்டை என்ப வற்றை திருடியதுடன்  அங் கிருந்த சீசீரீவி கமராவின் ஒளிப்பதிவு பெட்டியினையும் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இவ் வர்த்தக நிலையத் தில் இரண்டு வருடங்க ளுக்கு முன்னரும் பெருமள வான பொருட்கள் திருடப்பட் டிருந்தது. 

அது தவிர கடந்த வரு டம் தீயினாலும் எரிந்து நாச மானதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ் வர்த்தக நிலையத் தில் இடம்பெற்ற திருட்டினை ஒத்ததான திருட்டு பருத்தித்துறை மருதடிப்பகுதியில் உள்ள விக்கினேஸ்வரா ஸ்ரோரில் இரண்டு வாரங் களிற்கு முன்னர் இடம்பெற் றிருந்தமையும் இங்கு குறிப் பிடத்தக்கது.