குடும்பத்தலைவர் சடலமாக மீட்பு - யாழ்ப்பாணம் கந்தரோடையில் சம்பவம்

மானிப்பாய் சங்குவேலி வடக்கைச் சேர்ந்த கணபதிபிள்ளை இராசதுரை (வயது -59) என்பவரே இவ்வாறு சடலாம மீட்கப்பட்டுள்ளார்.

“குடும்பத்தினருடன் முரண்பட்டு அவர் கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் யாழ் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவரின் இறப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே தெரிய வரும்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.