யாழ கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் வீடு புகுந்து கொள்ளை!!

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மர்ம முறையில் வீட்டினுள் உட்புகுந்து  சிறுதொகை பணம்  திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் யோகநாதன் பூசனா தேவி கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள  வீட்டில் இன்று சனிக்கிழமை (04-08-2018) நள்ளிரவு 12.30 மணிக்கு திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் அனைவரும் உறங்கிய சமயத்தில் சமையலறையின் பின்புறமாக வைக்கப்பட்டிருந்த ஜன்னல் கதவு பலகைகளை கழற்றி  வீட்டினுள் உட்புகுந்த திருடர்கள்  சுவாமி அறையில் வைக்கப்பட்டிருந்த அலுமாரியில்  தமது  கைவரிசையை காட்டியதோடு சிறுதொகை பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும்  குறித்த வீதியில்   இரண்டு  நாட்களுக்கு முன்னர் அதிகாலை 4.15 மணியளவில்  இதே வீதியில் இதே வீட்டிற்கு அருகாமையில்  உள்ள சிவானந்தம் நிருஷா என்பவரின் வீட்டில்  மற்றுமோர்  திருட்டை  மேற்கொள்ள திருடர்கள் முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் இரண்டும் ஒரே தரப்பினரால் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.  கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.