ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய உதயநிதி

ரஜினி நடித்து ‘ஹிட்’ஆன படங்களில் தலைப்பை இன்றைய படங்களுக்கு சூட்டுவது வாடிக்கையாகி உள்ளது.

‘படிக்காதவன்’, ‘தங்கமகன்’ என்று தனுஷ் பல ரஜினி படங்களின் பெயர்களை தனது படங்களுக்கு தலைப்பாக்கி இருக்கிறார். விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ ஆகியவையும் ரஜினி படங்களில் பெயர்கள்தான். இப்போது உதயநிதியும் ரஜினி படத்தின் பெயரை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறார்.

இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘ஜாலி எல்எல்பி’ இது தமிழிலில் ‘ரீமேக்’ ஆகி வருகிறது. இந்த படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். அகமது இயக்கும் இந்த படத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்குப் பிறகு ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார்.

உதயநிதியின் இந்த புதிய படத்துக்கு ‘மனிதன்’ என்ற தலைப்பை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இது ரஜினியின் ‘ஹிட்’ படங்களில் ஒன்று.