நல்லூர் திருவிழா காலத்தில் ; பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை முற்றாகத் தடை

நல்லூர் திருவிழா காலத் தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு 30க்கும் அதிகமான கமராக்கள் பொரு த்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவ டிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப் படும் என யாழ் மாநகர முதல்வர் இமானு வேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

நல்லூர் உற்சவகால முன்னாயர்த்த நட வடிக்கைகளை உறுதிப்படுத்தும் கலந்துரை யாடல் நேற்று மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் செப்ர ம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த புனிதமான நாளில் எமது ஆடம்பரங்களை வெளிப்படுத்துவது இல்லா மல் எமது பண்பாட்டு, கலாசார விழுமியங் கள் மாறாமல் திருவிழாவை முன்னெடுக்க வேண்டும். அதற்காக இம்முறை எமது செயற்பாட்டுக் குழுவின் ஆலோசனைப்படி பல புதிய விடயங்களை  முன்னெடுத்துள்ளோம்.

உலகில் உள்ள அனைத்து பாகங்களி லும் உள்ள தமிழ் மக்கள் கலந்து கொள்ளும்  உன்னதமான திருவிழா இது. இத்திருவி ழாவை  மையப்படுத்தி யாழ் மாநகரத்தின் அபிவிருத்தி இலக்குகளை ஆரம்பிக்க வேண் டும். எமது நகரத்தை தூய்மையாக அடையாளப்படுத்தி சிறப்பாக இத்திருவிழாவை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.

நடைபாதை வியாபாரத்துக்கு விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக் குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் உரிய முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மின் சாரம், நீர், சுகாதாரம் என்பன சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்படவுள்ளது.

ஆலய நிர்வாகத்தினர் ஆலய வளாக த்தை சுற்றி அமைக்கும் திரைச்சீலைக்கு உட்புறமாக அதிகூடிய கட்டுப்பாடுகள் விதிக்க ப்படவுள்ளது. அதை அனைவரும் கடைப் பிடிக்க வேண்டும். குறிப்பாக நடைபாதை வியாபாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் மிக முக்கியமாக உற்சவ காலத் தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை முற் றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதியீ டாக மக்கள் இலகுவாக பாவிக்கக்கூடிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் சுற்றுச்சூழல் அதிகா ரசபை சிறந்த சேவை வழங்க எம்மிடம் அனுமதி கேட்டுள்ளார்கள். இந்த நடைமுறை கடின மாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுத்தமான பசுமையான நகரை உருவா க்கும் தொனிப்பொருளில் இந்த திருவிழா நடவடிக்கைகளை  ஆரம்பித்து வைக்கவு ள்ளோம் எமது இல க்கை அடைய இது ஒரு சந்தர்ப்பமாக எமக்கு அமைந்துள்ளது.

மக்களுக்கு அச்சத்தை தற்போது ஏற்படுத் தும் போதைவஸ்து பாவனை இருக்கிறது.

இந்த உற்சவகாலத்தில்  உச்சக்கட்டமாக கண்காணிக்கப்படவுள்ளது. விசேட கம ராக் கள் 30க்கும் அதிக மாக பொருத்தப்பட வுள்ளது. அத்து டன் பொலிஸாரின் கண்; காணிப்பு இம்முறை அதிகமாக இருக்கும். சிவில் உடையிலும் பொலிஸார் கடமை களை மேற்கொ ள்ளவுள்ளனர்.  

மேலும் குறிப்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதாவது ஆலய வளாகத்துக்குள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒளிப்பதிவு நடவடி க்கைகள்  தடைசெய்யப்பட்டுள்ளன, பச்சை குத்தும் நிலையம் அமைப்பதற்கு தடை விதி க்கப்பட்டுள்ளது, தெய்வங்களின் உருவப்படங்கள் அச்சிட்டு துண்டுப்பிரசுரங்கள் விநி யோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, உண வுகளை வாங்கி சென்று ஆலய வளாகத்தில் வைத்து உண்ணுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த மாநகரம் என்ற பெயருடன் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது எமது முக்கிய நோக்கம், எனவே வியாபா ரிகள், பொதுமக்கள், ஊழியர்கள் முழு ஒத்து ழைப்புடன் நடந்து சிறந்த முறையில் புனித த்தன்மையுடன் இந்த திருவிழா காலத்தில் செயற்பட வேண்டும் என மேலும் தெரி வித்தார்.