வயிறு பெருத்ததால் வயிற்றை பிளேற்றால் வெட்டிய யாழ்ப்பாண குடும்பஸ்தர் உயிரிழந்தார்

வயிற்று வலி தாங்க முடி யாமல் வயிறை பிளேட்டி னால் வெட்டிய குடும்பஸ்தர் 10 நாட்களின் பின்னர் சிகி ச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசா லையில் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் தவசிக்குள த்தை சேர்ந்த செல்லத்துரை ஞானச்சந்திரன் (வயது 55) என்ற குடும்பஸ்தரே மேற்படி உயிரிழந்தவராவார்.

கடந்த 23ஆம் திகதி வயிற்று வலி அதிகமானதால் குறித்த குடும்பஸ்தர் வலி தாங்க முடியாமல் பிளேட்டினால் 3 தடவை வயிற்றில் வெட்டியுள்ளார். உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை க்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகி ச்சை பலனின்றி நேற்று நண்பகல் உயிரிழ ந்துள்ளார். இந்த மரண விசாரணையை தென்மராட்சி மரண விசாரணை அதிகாரி இ.இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.