யாழ். குடாநாட்டில் இடம்பெறும் - வன்முறையை கட்டுப்படுத்தும் வரை பொலிஸாரின் விடுமுறை இரத்து

யாழ் குடாநாட்டில் இடம் பெறும் வன்முறைச் சம்பவ ங்களை கட்டுப்படுத்தும் வரை பொலிஸாருக்கான விடுமுறை  காலவரையறை யின்றி இரத்துச் செய்யப்பட்டு ள்ளதுடன்,  வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களில் இருந்து பொலிஸார் மேலதி கமாக வரவழைக்கப்பட்டுள் ளதுடன், குற்றச்செயல்களு டன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோவால் பொலி ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் குற்றச்செ யல்கள் அதிகரித்துள்ளன. இதனால்  பொதுமக்கள் சுத ந்திரமாக நடமாட முடியாத நிலையில் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸா ருக்கு அனைத்து தரப்பினரிடமிருந்து பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதுடன் குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு கோரப்பட்டது.

இந்நிலையில் குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச்சம்பவங்களை கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவருவதற்காக யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறை கால வரையறையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிகமாக 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் யாழ் குடாநாட்டு க்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசேட அதிரடிப்படையினரை இரவு நேரங் களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களுக்குள் குற்றச் செய ல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்படவேண் டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.