கோட்டையைக் கைப்பற்றுவதாக - இராணுவம் மீது பொய்க்குற்றச்சாட்டு- மகேஸ் சேனநாயக்க!!

யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் கையகப்படுத்தவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. இது இராணுவத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு என்று இரணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்த இராணுவத்தளபதி, கோட்டைக்கு நேரடியாகச் சென்று நிலவரங்களை ஆரயாந்ததுடன், அங்கிருந்த இராணுவத்தினருடனும் கலந்துரையாடினார்.
இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாண நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 25 வருடங்களிற்கும் மேலாக சிறு அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் தங்கியுள்ளனர். இது நாட்டின் எல்லா பகுதிகளிமுள்ளதொரு சாதாரண நடவடிக்கை.

அதேவேளை, எந்தநேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம். பொது மக்கள் கோட்டையை பார்வையிடுவதற்கு இராணுவம் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.

சந்திப்பில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியும் கலந்து கொண்டார்.