அரலி விதையில் விசம் இருக்கின்றதா என அறிய முற்பட்டு மரணமான யாழ் குடும்பஸ்தர்!!

விசம் என்று தெரிந்­தும் அதை உண்­டால் என்ன நடக்­கும் என்று விதண்­டா­வா­தம் பேசி அலரி விதையை உண்ட குடும்­பத் தலை­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார். இந்தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது.

வலி­கா­மத்­தில் நடந்த இந்­தச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்­த­வர் மூன்று பிள்­ளை­க­ளின் தந்தை. வீட்­டில் இருந்து காலை­யில் புறப்­பட்­டுச் சென்ற அவர் சிறிது நேரத்­தில் நிதா­னம் அற்ற நிலை­யில் வீட்­டுக்கு வந்­துள்­ளார். வீட்­டுக்கு வந்­த­தும் வரா­த­து­மாக வாந்தி எடுத்­துள்­ளார்.

இதை அவ­தா­னித்த மனைவி விசா­ரித்­துள்­ளார். தான் வரும் வழி­யில் இரண்டு அலரி விதை­களை உட்­கொண்­ட­தா­க­வும். இதனை உண்­டால் என்ன நடக்­கும் என பரி­சோ­திக்­கவே உண்­ட­தா­க­வும் மனை­வி­யி­டம் கூறி­யுள்­ளார்.

இத­னைக் கேட்ட மனைவி உட­ன­டி­யாக அவரை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்ப்­பித்­தார்.

எனி­னும் சில மணி­நே­ரத்­தி­லேயே அவர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார். இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.