யாழில் இறுதிச்சடங்கு நிகழ்வில் களேபரம்: ஐவர் படுகாயம்

யாழ்.தென்மராட்சி வரணிப் பகுதியில் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது. நேற்றுச் சனிக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஐந்துபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். வரணி வடக்கிலுள்ள கிராமமொன்றில் நேற்றைய தினம் இறுதிச் சடங்கு நிகழ்வொன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாழ்.வரணி வடக்குப் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் கஜன்(வயது-27), சவுந்தராஜ் ராஜ்மிலன்(வயது- 29), கந்தசாமி சுரேஷ்குமார்(வயது-31), கிட்டினன் தங்கலிங்கம்(வயது-45), கணபதி நவரத்தினம்(வயது- 52) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.