தாயாரின் திவசத்திற்கு வந்த மகனுக்கு ஏற்பட்ட நிலை!: யாழில் சம்பவம்

தனது தாயாரின் திவசத்திற்கு முல்லைத்தீவிலிருந்து யாழ்.மீசாலைக்கு வருகை தந்த மகன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனது இரண்டாம் ஆண்டுத் திவசத்திற்காக குறித்த தாயின் மகனான இளைஞன் யாழ்.மீசாலை மடத்தடியிலுள்ள தனது சகோதரன் வீட்டிற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று(26) பகல் வாழை இலை வெட்டச் சென்ற வேளையில் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறுதலாக விழுந்து காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவரை உடனடியாக உறவினர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் எஸ்.பிரதீபன்(வயது- 31) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.