யாழ் பொன்னாலைப் பாலத்தில் பறந்த பயணிகள் பஸ்!! மக்கள் அருந்தப்பு!!

இன்று காலை யாழ் பொன்னாலைப் பலத்திற்கு அருகில் அதி வேகமாக வந்த வடபிராந்திய பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் குடைசாய முற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை.


சாரதிக்கு திடீர் என தலைச் சுற்று ஏற்பட்டதாலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. பேரூந்தில் 4 பயணிகள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.