திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை: விஷால்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்–கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கதகளி’ படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நடிகர் சங்க வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். விஷாலுக்குத் தான் முதலில் திருமணம் நடைபெறும் என்று அவரது நண்பர் ஆர்யா கூறியுள்ளார். இதுகுறித்து விஷாலிடம் கேட்ட போது...

திருமணத்துக்கு நான் இன்னும் தயாராக வில்லை. திருமணம் என்பது வாழ்க்கையை மாற்றும் முக்கியமான விஷயம். கணவன்–மனைவி என்பது சாதாரண பொறுப்பு அல்ல. கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். எனவே, இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.

ஆர்யா திருமணம்தான் முதலில் நடக்கும். எனக்கு தெரிந்து இந்த வருடம் அவர் ஒரு முடிவுக்கு வந்து விடுவார் என்று நினைக்கிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் 3 வருடத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். எனது தொழிலிலும் கவனமாக இருக்கிறேன். ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஆர்யா உள்ளிட்ட எனது நண்பர்களுடன் வாரம் ஒரு முறை சந்திக்கிறேன். செய்ய வேண்டியது பற்றி கலந்து பேசுகிறேன். நல்ல நண்பர்கள் குழு கிடைத்திருக்கிறது. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றார்.