யாழில் சனநடமாட்டமுள்ள பகுதியில் ஆசிரியையின் சங்கிலி அறுத்தெடுப்பு

யாழ்.கொக்குவில் பகுதியில் பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியையொருவரின் பெறுமதியான தங்கச் சங்கிலி மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்தெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.கொக்குவில் ஸ்தான சி.சி.த. க பாடசாலையில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியை நேற்று(25) பிற்பகல் தனது கடமைகளை முடித்த பின்னர் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே அங்கு மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் குறித்த ஆசிரியையின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாடசாலைக்கு அண்மையில் சனநடமாட்டமுள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.