யாழில் நடக்கவிருந்த பெரும் அலங்கோலம் நிறுத்தப்பட்டது!! 13 காவாலிகள் கைது

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ” ஐ ” குழு எனவும் ” சாவா ” குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் குழு மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் ” வடி” ரக வாகனத்தில் சென்றுள்ளனர்.

இளைஞர்கள் குழு மோதலுக்கு தயாராக எழுமட்டுவாழ் பகுதிக்கு வருகின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாமம் பொலிஸார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , பொலிசாரை கண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.

அவர்கள் தப்பிச் செல்லும் பாதையை பளை பொலிஸாருக்கு, கொடிகாமம் பொலிஸார் அறிவிதத்தை அடுத்து , பளை பொலிஸார் மருதங்கேணியில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிஸார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்தனர். வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.