யாழில் குடி வெறியில் சினிமாப் பாட்டு பாடியவரை துரத்தித் துரத்திக் கடித்த நாய்கள்

யாழ் தென்மராட்சிப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவு குடி போதையில் தெருவால் உரத்துப் பாட்டுப் படித்துக் கொண்டு சென்றவரை துரத்தித் துரத்தி நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. 3 நாய்கள் குறித்த நபரைக் கடித்துக் குதறியதாகத் தெரியவருகின்றது. இதனால் படுகாயமடைந்த 58 வயதாக குறித்த குடும்பஸ்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதே வேளை குறித்த நாய்களை வளர்த்தவர்கள், நாய்களை வீதியில் விட்ட குற்றத்திற்காக பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.