கொடிகாமத்தில் தங்கம் என நினைத்து கவரிங் நகை அறுப்பு

கவரிங் நகையை தங்க நகை என எண்ணிய திருடர்கள், அறுத் துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற் றுள்ளது.

கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்று ள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

சாவகச்சேரிப் பகுதியில் இருந்து ஏ9 வீதி யூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியையை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு வர் கோயிலாமனைப் பகுதியில் ஆட்கள் அரவமற்ற பகுதியில் வைத்து மறித்துள்ளனர்.

குறித்த இருவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட போதும் சடுதியாக சங்கிலியை அறு க்க முற்பட்ட போது, இது கவறிங் சங்கிலி எனக் கூற, திருடர்கள் யாருக்கு கதை அளக் கிறாய் எனக் கூறி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பித்த இருவரு க்கும் சுமார் இருபத்திரண்டு தொடக்கம் இரு பத்தைந்து வயதுக்குட்பட்டவர்கள் என பாதி க்கப்பட்ட அப்பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த நகை கவறிங் என்பதனால் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்யவில்லையெனவும் இதனால் தேவை யற்ற பிரச்சினைகளை எதிர் நோக்க வேண் டிவரும் என்ற அச்சத்திலும் முறைப்பாட் டினை பதிவுசெய்யவில்லை எனவும் சம்பவ த்துடன் தொடர்புடையவர் மனவுளைச்சலு க்கு ஆளான நிலையில் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியி லேயே இடம்பெற்றுள்ளது.