திட்டமிட்டு ஆசிரியர் மீது பாலியல் வல்லுறவு வழக்கா?? யாழ் ஆசிரியருக்கு நடந்தது என்ன?

பதின்ம வயது மாணவிகள் இருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் யாழ்ப்பாணம் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

“பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பணிநீக்கத்துக்கு இந்த ஆசிரியரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற காரணத்தைக் காட்டியே இவர் பழிவாங்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் வன்னிப் பகுதியில் நீண்டகாலம் பணியாற்றி அங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றியவர். பொருளியல் ஆசிரியரானா இவர் ஒழுக்கமுடையவர். நிர்வாக ரீதியான பழிவாங்கலுக்குள்ளான இவரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

வழக்கை தாக்கல் செய்த யாழ்ப்பாணம் பொலிஸாரும் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரி ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை நேற்று (18) இரவு கைது செய்தனர்.

ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

இதன்போதனே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

நிர்வாக ரீதியான
பழிவாங்கலுக்கு மாணவிகள் பலிக்கடவா?

சந்தேகநபர் தரப்பு குறிப்பிடுவது போன்று ஆசிரியரைப் பழிவாங்குவதற்கு மாணவிகள் இருவர் பயன்படுத்தப்பட்டுள்ளனரா?

பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு யாழ்.மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உடந்தையாக செயற்பட்டுள்ளனரா? என்று விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும்.

அவ்வாறான விசாரணைகள் நடைபெறும் போதுதான் மாணவிகளுக்கு அல்லது ஆசிரியருக்கு நீதி கிடைக்கும்.

இதற்கான விண்ணப்பத்தை சமூக ஆர்வம் கொண்ட சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்வைப்பபார்களா? என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.