தொடர்கின்றது காவாலிகளின் அட்டகாசம்!! கைதடியில் ஹயஸ் அடித்து நொருக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் கைதடி தெற்கிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்த இனம் தெரியாத கும்பலொன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வானை அடித்து நொறுக்கிப் பெரும் அட்டாகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நான்கு மோட்டார்ச் சைக்கிள்களில் தங்கள் முகங்களை மறைத்தவாறு வந்தவர்களே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், குறித்த ஹைஏஸ் வானுக்குத் தீ மூட்ட முயன்ற போது வீட்டிலிருந்தவர்கள் அவலக்குரல் எழுப்பியதையடுத்துக் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.