நடுவானில் ஒரு விமானம் இன்னொரு விமானத்தை ஓவர்டேக் செய்யும் காட்சி

சாலையில் அதிவேகமாக இரு கார்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும்போதே அதில் எழும் காற்றானது சாலையோரம் நிற்பவர்களை ஒரு உலுக்கு உசிப்பிவிட்டு செல்வதை நம்மில் சிலர் கண்கூடாக அறிந்திறிப்போம்.

ஆனால் மணிக்கு நூறு, நூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்கள் ஒன்றையொன்று ஓவர்டேக் செய்யும்போதே இப்படி நமக்கு தோன்றுகிறதே, மணிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் விமானத்தை இன்னொரு விமானம் ஓவர்டேக் செய்தால் எப்படி இருக்கும்.

போயிங் 737 ரக பயணிகள் விமானத்தை மற்றொரு போயிங் 747 ரக பயணிகள் விமானம் ஈராக் தலைநகர் பாக்தாத்தை ஒட்டிய வான்எல்லையில் ஓவர்டேக் செய்த போது எடுத்த காட்சி. பார்த்தாலே மெய் சிலிர்க்கும் வீடியோவை கிழே காணுங்கள்.