வேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு!!

 வேம்படி உயர்தர மகளீர் பாடசாலையில் அண்மையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. குறித்த பரிசளிப்பு விழாவில் 9 ஏ எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக 9ஏ எடுத்த ஒவ்வொரு மாணவிக்கும் தலா நுாறு ரூபா பரிசாக வழங்கப்பட்டது. அந்தப் பணம் வவுச்சராகவே வழங்கப்பட்டதுடன் அப் பணத்தில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் விற்கும் ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம் என்றும் கூறியுள்ளார்கள். ‘9 ஏ எடுத்த எங்களுக்கு பாடசாலை பரிசு தரப்பபோகின்றது என்ற சந்தோசத்தில் மாணவிகள் சிலர் புதிய சீருடைகளை 500 ரூபாவுக்கு மேல் செலவு செய்து தைத்து உடுத்திக் கொண்டு சென்றதுடன் புதிய சப்பாத்துக்களையும் வாங்கி அணிந்து சென்றுள்ளனர். சில மாணவிகளின் பெற்றோர் குறித்த சீருடை மற்றும் சப்பாத்துக்களை வாங்குவதற்காக கடன் வாங்கியே கொடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

நுாறு ரூபாவின் மதிப்பு எவ்வளவு உயர்ந்தது என்பதை வேம்படி மகளீர் கல்லுாரி அதிபர் உணர வைத்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கற்று வெளியேறிய ஆயிரக்கணக்கான பழைய  மாணவிகள் பல்வேறு நாடுகளில் திருமணம் முடித்து  வாழ்ந்து வருவதுடன் கணவர்களின் சம்பளத்தைக் கூட வறுகி எடுத்து இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு கொடுப்பதிலேயே மும்முரமாக நிற்கின்றார்கள் என்றும் வேம்படி மகளீர் கல்லுாரியில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பெருமையுடன் தெரிவித்தார்.