திருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல்!! சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்!!

திருநெல்வேலியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில், அங்கு பயிரிடப்படும் பயிர் வகைகளில் விளையும் காய் கறிகள், பழங்களை பொதுமக்களுக்கு விற்பதற்கு அங்கு ஒரு விற்பனை நிலையத்தை நடாத்தி வருகின்றது. இதை  அறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்  திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு காய்கறிகள் வாங்கச் சென்றுள்ளார். அவர் அங்கு காய் கறிகளை வாங்கிய சமயம் நடந்த சம்பவம் ஒன்றை பத்திரிகை ஒன்றில் வாசகர் திருமுகமாக எழுதியிருந்தார். அந்த விபரம் இதுதான்.....

திருநெல்வேலியிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்

மரக்கறிகள் தினமும் அறுவடை செய்யப்படுகின்றன. இவ்வாறு

அறுவடை செய்யப்படும் மரக்கறிகள் அங்கு கடமையாற்றும்

உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தமக்குத் தேவையானதை எடுத்த

பின்னர் மிகுதி தான் பொதுமக்களுக்கு விற்பனை

செய்யப்படுகிறது. கடந்த 21.6.18 அன்று அங்கு மரக்கறிகள் வாங்கச் சென்ற போது மரக்கறிகள் இல்லாது இருந்தன. இது தொடர்பாக நான் விசாரித்து அறிந்த பின்னர் ” நீங்கள் முழுவதையும்

கொண்டு போனால் பொதுமக்கள் என்ன செய்வது

பொதுமக்களுக்கும் பகிர்ந்தளியுங்கள்” என்றேன்.அங்கு

கடமையிலிருந்த உத்தியோகத்தர் பொதுமக்களுக்கு விற்பனை

செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எமது தேவைக்கு

எடுத்துக்கொண்டு மிகுதியை தான் பொதுமக்களுக்கு விற்பனை

செய்கிறோம் என்றார்.அப்படியானால் விவசாய ஆராய்ச்சி

நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின்

தேவைக்காகவா அங்கு மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன?

விவசாயத்தினக்களம் அவ்வாறு சுற்றுநிருபம் எதாவது

அனுப்பியுள்ளதா? விவசாய ஆராய்ச்சி என்ற பெயரில் அங்கு

கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் தேவைக்குமரக்கறிகள்

உற்பத்தி செய்வதா விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம்.‘

 இவ்வாறு குறித்த ஊடகவியலாளர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வாசகர் கடிதம் எழுதியிருந்தார்.

இதன் பின்னர் மீண்டும் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு மரக்கறி வாங்க அந்த ஊடகவியலாளர் சென்ற போது அவர் அங்கு கடமையிலிருந்த ஒரு ஊழியரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ‘பெரியவர் உங்களை சந்திக்க வேண்டுமாம்‘  என்றும்  அந்த ஊழியர் கூறியுள்ளார்.

இதையடுத்து குறித்த ஊடகவியலாளர் நான் சென்று சந்திப்பதற்கு நேரம் இல்லை. விரும்பினார் அவரை வரச் சொல்லுங்கள் என கடமையிலிருந்த ஊழியருக்கு கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கு வந்துள்ளார் அந்த பெரியவர் (அரச அதிகாரி). குறித்த ஊடகவியலாளரைப் பார்த்து‘சூடு, சொரணையிருந்தால் இந்தப் பக்கம் வராதே‘ என ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

இதே வேளை அவருடன் அங்கு நின்ற இன்னொரு உத்தியோகத்தர் அங்குள்ள முள்ளுக்கம்பி வேலியில் காலை ஊன்றிக் கொண்டு மேலாடையை இழுத்துக் கட்டியபடி வில்லனைக் கதாநாயகன் பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தாராம். இவ்வளவு சம்பவத்தையும் அலுவலக்குத்து வெளியே வந்து அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஊழியர்களும் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்களாம்.......

சம்பவத்தை நாம் இங்கு தெரியப்படுத்தியுள்ளோம்.  விவசாய அமைச்சின் கீழ் தொழிற்படும் இந்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பெரியவரின் தொழிற்பாடை அந்த அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகளாக இருப்பவர்களில் சூடு சொரணையுள்ளவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்களா???


தற்போது இலங்கையில் விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.