மாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.

   தற்போது இரண்டாம்தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன அதற்கான தயார்படுத்தலில் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இன்னும் சிலநாட்களில் மாணவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் உயர்தரப்பரீட்சையும் மாணவரின் முதலாவது பொதுப்பரீட்சையான புலமைப்பரிசில் பரீட்சையும் நடைபெறவிருக்கிறது. .இந்தநிலையில் பொதுமக்களையும் மாணவரையும் துன்புறுத்துவதற்கு சித்தன்கேணி கொட்டுக்கலட்டி முத்துமாரியம்மன் ஆலயத்திலும்  சங்கானை சிலம்புபுளியடி ஆலயத்திலும் இரக்கமில்லாதவகையில் இரவுபகலாக நீண்ட தூரத்திற்கு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு இரைந்துவருகிறது. இதனால் அக்கிராம மாணவர்கள்மட்டுமின்றி அயல்கிராமமாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நல்ல மாட்டுக்கு ஒருசூடு என்பார்கள் ஆனால் எத்தனைமுறை ஊடகங்கள் சுட்டிக்காட்டினாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்.மற்றவர்களைப்பற்றி அக்கறையில்லாத ஒருசில காவாலிகள் முழுச்சமூகத்தின் கல்வியையுமே வேரோடு அறுக்க கங்கணங்கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே வாள்வெட்டு ,பாலியல்வன்புணர்வு,கொலை என இளஞ்சமுதாயம் சீரிழிந்துபோய்க்கொண்டிருக்கும்நிலையில் கல்வியறிவில்லாத இந்த நாதாரிகளினால் சீரிழியும் மாணவர்சமுதாயம் எங்கேசெல்லப்போகிறதோ என பெற்றோர் கவலைதெரிவிக்கின்றனர்.