வாள், கம்பியுடன் நால்வர் கைது - கல்லுண்டாயில் நேற்றிரவு சம்பவம்

இந்தச் சம்பவம் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

“கல்லுண்டாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள் சமாந்தரமாக வந்தன. அவற்றில் 4 பேர் பயணித்தனர்.

அவற்றை வழிமறித்து சோதனையிட்ட போது, ஒரு வாள், ஒரு இரும்புக் கம்பி என்பன அவர்களிடம் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.