கிளிநொச்சியில் சில இளைஞர்களால் நடக்கும் கேவலம்! கொந்தளிக்கும் மக்கள்

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி குளத்தின் முன்பாக மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட விடுதி தற்போது விபச்சார குற்றங்களையும், போதை வஸ்துக்களையும் இளைஞர்கள் பாவிக்கின்ற இடமாக அமைந்துள்ளது.

இதனுள் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் பொருள் என அங்கு காணும் காட்சி முகம் சுளிக்க வைக்கிறது.இந்த விடுதி தற்போது விபச்சார விடுதியாக மற்றும் மதுபான சாலையாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்த பாழடைந்த சுற்றுலா விடுதியை பராமரிக்கவும் அல்லது உங்களினால் பராமரிக்க முடியாவிட்டால் அந்த விடுதியை அகற்றுங்கள் தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கு போதைபாவனைகளை கரைச்சிப் பிரதேச சபை ஊக்குவித்து வருகின்றது என்பதில் மனவருத்தம் அடைகிறேன்.

எதிர்காலத்தில் நாங்கள் -வித்தியா, ரெஜினா, போன்ற பல பெண்பிள்ளைகளை கிளிநொச்சியிலும் இழக்க நேரிடும் என்பதனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.