மணலுக்கு பதிலாக கிரவல் மண்! கிளிநொச்சியில் மாற்றீட்டு தொழிநுட்பம்

மாற்றீட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்தி கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது, 

கிளிநொச்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மணலுக்கு பதிலாக கிரவல் மண்ணை பயன்படுத்தி வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த வகையில் கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பகுதியில் மாற்றீட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்தி வீடுகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையிலேயே குறித்த வீடுகள் இன்று காலை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

 இந்த நிகழ்வில் கிளநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பதில் பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.