கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க அரச பேருந்து சாலைக்கு சென்றதுடன். ஐ.தே.கட்சி காரியாலயத்தையும் திறந்துவைத்துள்ளார்.

அந்த வகையில் இன்று காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது அரச பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து சாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து, பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலகத்தினையும் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது இன்றைய நாளின் நினைவாக 200 தென்னங்கன்றுகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட ஐ.தே கட்சியின் அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.