ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபரை விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதி செயலகம், வட மாகாண கல்வி அமைச்சர் கே. சர்வேஸ்வரனுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 கொழும்பில் குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த ஆனந்த சுதாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுகாதாரனின் மனைவி புற்று நோயினால் உயிரிழந்த போது இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் சுதாகரனின் மகள் தந்தையுடன் சிறைக்கு செல்ல முயற்சித்த சம்பவம் ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

எனவே நீநிதிமன்ற செயன்முறைக்கு அமையவே குறித்த நபரை விடுதலை செய்ய முடியும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.