கலா அக்கா!! நீ நல்லவளா? கெட்டவளா?? புல்லரிக்க வைச்சிட்டியே?? ஏன் அக்கா?? ஏன்???

பிரபாகரன் என்ற ஊற்றில் கிளம்பிய புலிகள் இமயமலையில் இருந்து உருவாகிய கங்கை நதி போன்றவர்கள்..... அந்த கங்கையில் குளித்து புனிதமானாரா விஜயகலா??? புலிகளைப் புகழ்ந்து பேசினால் நீயும் தமிழ்த்தேசிய உணர்வாளனே....  கள்ளன், காமுகன், கொலைகாரன் ஆகிய யாராக இருந்தாலும் புலிகளைப் புகழ்ந்து பேசி தற்போது தமிழ்த்தேசிய உணர்வாளர்களாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் புலிகள் தொடர்பாக புகழ்ந்து பேசி பெரும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன்.

வித்தியா கொலை செய்யப்பட்ட போதோ அல்லது வேறு பகுதிகளில் நடந்த கொடூர கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றை, மகளீர் விவகாரங்களுக்கு பொறுப்பான முக்கிய அமைச்சரான விஜயகலா, பேச வேண்டி இடமான பாராளுமன்றில் பேசாது, அதற்குரிய அதிகாரிகளுடன் பேசாது,  யாழில் உள்ள மிக முக்கிய மக்கள் சமூகத் தொடர்பாளர்களாக இருக்கும் அரச உத்தியோகத்தர் முன் உணர்ச்சிப் பிளம்பாக மாறியது ஏன் என்பதை யாராவது ஒரு மண்டைக்குள் சரக்கிருப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா??

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் பெருமளவு மக்கள் புலிகளின் மீதும் தமிழ்த்தேசியத்தின் மீதும் பெரும் பற்று வைத்திருக்கின்றார்கள் என்பதையும் புலிகளைப் பற்றியும் தேசியத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்றாகத் தெரியும்.

இந் நிலையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகராசா மகேஸ்வரனின் மனைவியான விஜயகலாவும் தனது கணவன் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை வெளிப்படையாகக் கூறினால் தன்னால் அரசியல் செய்ய முடியாது, தன்னை தமிழ்மக்கள் துரோகிகளாக நினைப்பார்கள் என்று நன்றாக அறிந்தே, தனது கணவரை புலிகள் சுட்டுக் கொல்லவில்லை என்று கூறி வருகின்றார்.

தற்போதும் மகேஸ்வரனைச் சுட்டுக் கொன்றவர்களில் முக்கியமானவர் அந்தக் குற்றத்திற்காக சிறைக்குள் இருக்கின்றார். வசந்தன் என்று அழைக்கப்படும் குறித்த நபர்,  மகேஸ்வரனை புலிகளே கொன்றார்கள் என்பதற்கு நேரடிச் சாட்சியாக உள்ளார்.

மகேஸ்வரனைப் புலிகள் சுடவில்லை என்று விஜயகலா நீதிமன்றில் உறுதிப்படுத்தினால் விஜயகலா உன்னதமான ஒரு அரசியல்தலைவர் என்று கருதப்படுவார். விஜயகலாவின் புருசனைச் சுட்டது புலிகள்தான் என்பது தென்னிலங்கை அரசியல்தலைவர்கள் உட்பட வடக்கின் அனைத்து தலைவர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க கட்சியில் போட்டியிட முற்பட்ட மகேஸ்வரனை புலிகள் கடுமையாக எச்சரித்து கொழும்புக்கு கலைத்த வரலாறு அனைவருக்கும் தெரியும். அத்துடன் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வன்னி வழியாக கொண்டு வரும் பொருட்களுக்கு புலிகள் வரி விதித்து வந்தார்கள். இந் நிலையில் குறித்த வரி விதிப்பை மீறி மகேஸ்வரன் கப்பலில் பொருட்களை கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் இறக்கினார்.

இதனால் கொதிப்பான புலிகள் மகேஸ்வரன் இந்து கலாச்சார அமைச்சாரக இருப்பதையும் மீறி அவரை வன்னிக்கு அழைப்பித்து 3 நாட்கள் மிகுந்து உபசாரம் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த உபசாரம் என்னவெனின் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் தடுத்து வைத்திருந்த மகேஸ்வரனுக்கு மலசலம் கழிப்பதற்கு கூட ஒழுங்கான வசதி செய்து அவர்கள் கொடுக்கவில்லை. மகேஸ்வரனை பயிற்சி பெறும் புலிகளின் மலசல கூடத்திலேயே மலசலம் கழிக்க விட்டார்கள். அந்த மலசல கூடங்கள் எப்படி என்பது பயிற்சி பெற்ற புலிகளுக்குத் தெரியும்.

அவ்வாறு தடுத்து உபசரிப்பு கொடுத்தமை தாங்க முடியாத மகேஸ்வரன் கப்பலில் கொண்டு வந்த பொருட்களின் பெறுமதியில் 25 வீத பெறுமதியான 4 கோடி ரூபாவைக் கொடுத்தே வெளியே வந்தார் என்பது மகேஸ்வரனின் பெண்டாட்டியான விஜயகலா உட்பட புலிகளின் நெருங்கிய ஊடகவியலாளர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையில் அடிபட்ட பாம்பாக கொதித்துப் போயிருந்த மகேஸ்வரன் புலிகள் மீது நஞ்சைக் கக்குவதற்கு காத்திருந்தார். 2006ம் ஆண்டு மீண்டும் சண்ட ஆரம்பித்தவுடன் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் பொருட்கள் ஏற்றி இறக்கப்பட்டன. இவ்வாறு வர்த்தகர்களால் ஏற்றி இறக்கப்படும் பொருட்களுக்கான வரியை புலிகள் கொழும்பில் உள்ள தமது முகவர்கள் ஊடாகப் பெற்று வந்தமை அனைத்து வர்த்தகர்களும் அறிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையில் மகேஸ்வரனின் கப்பலில் ஏற்றப்படும் பொருட்களுக்கான வரியை மகேஸ்வரன் புலிகளுக்கு செலுத்தாமல் விட்டதுடன் புலிகளின் முகவர்களாக கொழும்பில் செயற்பட்டவர்களை அரசாங்க புலனாய்வாளர்களுக்கு காட்டியும் கொடுத்தார்.

ஆனால் பாராளுமன்றில் புலிகள் தொடர்பாக வயிறு கிழியும் மட்டும் ஆதரவாகக் கத்திக் கொண்டு டக்ளஸ் தேவானந்தாவை தனது எதிரியாக காட்டிக் கொண்டிருந்தார். யாரை ஏமாற்றினாலும் புலிகளை ஏமாற்ற முடியாது என்பது மகேஸ்வரனுக்கு தெரிந்திருந்தது. ஆனால் தனக்கு புலிகளின் ஆதரவு இருக்குது என்று காட்டினால் மாத்திரமோ கொழும்பில் தமிழர்களின் வாக்கை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும் மகேஸ்வரனுக்கு தெரியும். டக்ளசுக்கு புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் மத்தியில் இருந்த வெறுப்பை தனக்கு சாதகமாக்கி டக்ளசை எதிர்ப்பது போல் எதிர்த்து புலிகளை மிகத் தந்திரமாக அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுத்து வந்தார்.

மகேஸ்வரன் புலிகளுக்கு எதிராக செயற்படுகின்றார் என்பதை மகேஸ்வரனுடன் ஒட்டியிருந்த கொழும்புத் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் அந்நேரத்தில் பாராளுமன்ற செய்தியாளராக இருந்த ஊடகவியலாளர் ஒருவர் அறிந்திருந்தார். இவரையும் புலிகள் தமது தேவைக்காக சிறப்பாக பயன்படுத்தியிருந்தனர்.  இவர் தொடர்பான விபரங்களை பின்னர் தருகின்றோம்.

ஆனால் குறித்த பத்திரிகையாளர் மகேஸ்வரன் புலிகளைக் காட்டிக் கொடுக்கின்றார் என்பதை அறிந்தும் அதை புலிகளுக்கு சொல்லாது இருந்தார். ஆனால் புலிகள் துல்லியமான தகவலைப் பெற்று கோயில் என்றும் பாராது 2008ம் ஆண்டு தொடக்க நாள் அன்று மகேஸ்வரனை போட்டுத்தள்ளினர்.

புலிகள்தான் மகேஸ்வரனைப் போட்டுத் தள்ளினர் என்பதை சில நாட்கள் அறியாதிருந்த விஜயகலா அதன் பின்னர் மிகத் தெளிவாக அறிந்து கொண்டார். விசாரணைகள் நடைபெற்று மகேஸ்வரனைப் போட்டுத் தள்ளிய புலிகளுக்கு அதற்குரிய தண்டனையும் கிடைத்து தற்போது அவர்களில் ஒருவர் உயிருடன் சிறைக்குள்ளும் இருக்கின்றார்.

இவற்றையெல்லாம் மூடி மறைத்து மகேஸ்வரனின் பெண்டாட்டி விஜயகலா தற்போது புலிப் புராணம் பாடுவது சொந்தப் புருசன் உயிருடன் இருக்கும் போதே புருசனின் எதிரியுடன் உறவாடுவதற்கு சமமாகும்.

இன்னுமொரு முக்கிய விடயத்தை விஜயகலா உணர வேண்டும். ஒட்டுக்குழு தலைவராக புலிகளால் கூறப்பட்ட ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ்தான் தனது புருசனைக் கொன்றது என விஜயகலா மேடைகளில் கூற முடியாது. ஏனெனில் உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் போட்ட மான நஸ்ட வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் டக்ளஸ் தேவானந்த....

ஆகவே இன்னொரு தடவை வாயைக் கொடுத்து வம்பில் மாட்டமாட்டார் விஜயகலா.

விஜயகலா சரியான ஒரு பெண்ணாயிருந்தால் டக்ளஸ்தான் மகேஸ்வரனை கொன்றது என ஆணித்தரமாக வாக்குமூலமாக பொலிசாரிடம் முறையிட்டு டக்ளசிற்கு எதிராக வழக்கைத் தொடர்ந்து பார்ப்பாரா?

விஜயகலாவின் அருவருப்பு மிக்க தனிப்பட்ட நடத்தைகள் பற்றி எழுதுவது அநாகரீகமானது என்றாலும் அரசியல் ரீதியில் விஜயகலா செய்யும் கேவலமான செயல் தொடர்பாக தமிழ் மக்கள் மிக அவதானமா இருக்க வேண்டும்.

மகேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் இ யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தி அடித்த புலிகள் தற்போதும் செயற்பாட்டு நிலையில் இருப்பார்களானால் தற்போது விஜயகலா யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கமாட்டார். யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்கமாட்டார்.

வித்தியாவைக் கொன்ற கொலையாளியான சுவிஸ் குமார் மற்றும் அவனுடை தம்பி ஆகியோருடன் நேரடித் தொடர் கொண்டிருந்த விஜயகலா அவர்களைக் காப்பாற்ற முயன்ற விஜயகலா யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என பேசுவது சாத்தான் ஓதும் வேதம் போல் உள்ளது.

வாசகர்களாகிய உங்களுக்கு விஜயகலாவின் சில தனிப்பட்ட விடயங்கள் தெரியாவிடினும் விஜயகலாவின் அம்மா தற்போது என்ன நிலையில் உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? விஜயகலாவின் சகோதரிகள் என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்து பாருங்கள்...

தனது கணவன் இறந்த பின்னர் கணவனின் சொத்துக்களைக் கைப்பற்ற முயன்ற மகேஸ்வரனின் சகோதரர்களில் ஒருவருக்கு விஜயகலா நல்லுார் கோவில் முன் வைத்து அசிற் ஊற்றியது யாருக்காவது தெரியுமா??

அந்த அசிற் ஊற்றில் முதுகில் படுகாயமடைந்த மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் அப்போதய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அசிற் வீச்சை நடாத்திய முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரக்தியோக செயலாளராக இருந்த இராணுவ மேஜர் ஜெயக்கொடி என்பவனை பதவியில் இருந்து நிறுத்திய விடயம் யாருக்காவது தெரியுமா?

அந்த ஜெயக்கொடிக்கும் விஜயகலாவுக்கு இருந்த உறவு எத்தகையது என்பது யாருக்காவது தெரியுமா?

விஜயகலாவுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோத்தபாயவிடம் துவாரகேஸ்வரன் கெஞ்சி மன்றாடியும் கோத்தபாய அதற்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை.... அது ஏன் தெரியுமா??

இவ்வாறு ஆயிரக்கணக்கான மர்மங்கள் நிறைந்தவராக உள்ள விஜயகலா புலிகளைப் பற்றி புகழ்ந்து பேசி கங்கையில் குளித்து புனிதரான கதையாக மாறும் நிலையை தமிழ் மக்கள் உணரவேண்டும்.

மேலும் மேலும் விஜயகலா மற்றும் விஜயகலாவுடன் தொடர்புள்ளவர்கள் எவ்வாறானவர்கள் என்பதை தொடர்ந்து வெளியிடுவோம்...

நன்றி

தமிழ்த்தேசியப் பற்றாளர்

T.V.Elian

 

இந்த தகவல் எமது இணையத்தளத்தின் மின்னஞ்சலுக்கு வந்த தகவலாகும். இது தொடர்பாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பனர் விஜயகலா மறுப்பு அல்லது கருத்து சொல்ல விரும்பினால் எமது மின்னஞ்சலான newjaffna@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கருத்துக்களை அனுப்பலாம் ஊடக தர்மத்தின் படி நாம் நிச்சயம் அதனைப் பிரசுரிப்போம்.

நன்றி

ஆசிரியர் குழு