யாழ்.வடமராட்சியில் கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்.வடமராட்சி நாகர் கோவில் கடற்பரப்பில் அத்துமீறிக் கடலட்டை பிடியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் ஆறுபேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை(04) அதிகாலை கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த ஆறுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைதானவர்கள் கடலட்டை பிடிப்பதற்குப் பயன்படுத்திய இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர்களில் ஐந்துபேர் மன்னார் மாவட்டத்தையும், ஒருவர் மாமுனைப் பகுதியையும் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.