குற்றச் செயல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் - மீனவப் பிரதிநிதிகளிடம் யாழ் கட்டளை தளபதி

குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடு ப்பதற்கும் சட்ட ஒழுங்குகள் சீராக நடைபெறுவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக மீனவ பிரதிநிதிகளிடம் யாழ் மாவட்ட கட்டளை தளபதி தர்சன கெட்டியாராட்சி உறுதியளித்துள்ளார்.

மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்சன ஹெட்டி யராட்சிக்கும் இடையில் நேற்று கலந்துரை யாடல் ஒன்று பலாலி படை தலைமையகத் தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாட லின் பின்னர் மீனவ சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த கலந்துரையாடலின் போது,  படை யினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன். மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியதுடன் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்சவீட்டினை விடு வித்தல்,படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கரையோரப் பிரதே சங்களது விடுவிப்பு,தங்கியிரு ந்து மீன்பிடியில் ஈடு படும் மீனவர்களி ற்கான வயர்லெஸ் கருவிகளை பயன்ப டுத்தும் அனுமதி, கடலில் தொழிலின் போது காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

தமது கோரிக்கைக்கு கரை யோர பிரதேசங்கள் கட்டம் கட்டமாக விடு விக்கப்படும் என தளபதி உறுதியளி த்திருந்தார் என தெரிவித்தார்.

மேலும் தற்போது மக்களது அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதிலும் சட்டம் ஒழுங்கை பேணுவதிலும் அரசு தவறு மானால் மக்கள் தமது பொற்கால மான புலி களது ஆட்சிக்காலத்தை மீள விரும்பு வாரென மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைவதற்கும் படையினருக்கும் தொடர் பில்லையென மறுதலித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி இந்த விடயம் குறித்த கடற்படை பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.