அவுஸ்திரேலிய நிருபரை கலாய்த்த டோனி: வைரலாகும் வீடியோ (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரே கேள்வியால் அவுஸ்திரேலிய நிருபரை வாயடைக்க செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டோனி தோல்விக்கான காரணங்களை கூறினார்.

அப்போது ஒரு அவுஸ்திரேலிய நிருபர், "ரோஹித் சர்மா 'எட்ஜ்' ஆனதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லையே எனக் கேட்க, டோனி "நீங்கள் எப்படி கேட்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ,மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்.

அந்த நிருபர் மீண்டும் அதே கேள்வியை திரும்பக் கேட்க, "ஓ.. எட்ஜ் குறித்து நீங்கள் கேட்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் முதல் போட்டியில் ஜார்ஜ் பெய்லி குறித்து இதே கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்கவில்லை” என கலாய்த்தார்.

டோனியின் எதிர்பாராத பதிலால் அந்த அவுஸ்திரேலிய நிருபர் பதில் ஏதும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார்.

முதல் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லிக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதையே டோனி கிண்டலாக சுட்டிக் காட்டினார்.