யாழில் சுதேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி உருவாக்கம்!

இளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளது.

குறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயல்குழு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் தலைவராக அரியநாயகம் ரஞ்சித்தும், உபதலைவராக குஞ்சித்தம்பி தினேசும், பொருளாளராக விவேகானந்தா புவிசனும், கொள்கை பரப்பு செயளாளராக அமிர்தலிங்கம் மதுசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் இளைஞர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயலாளருமான ச.மதிராஜ் புதிய கட்சி ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தமிழ்மக்களின் நலனுக்காகவும் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மக்களுடன் மக்களால் சுதேசிய மக்கள் கட்சி செயற்படும் எனவும், உயரிய மக்கள் சேவைக்காக அனைவரையும் அணிதிரளுமாறும் அது காலத்தின் தற்போதைய தேவை எனவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுதேசிய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயளாளருமான ச.மதிராஜ் இளைஞர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை,இளைஞர்கள் ஒன்றிணைந்து யாழில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமை தமிழர் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.