யாழில் போதை கலந்த வெற்றிலை விற்பனை

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கலந்து வெற்றிலை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கடையில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாவா எனப்படும் போதை கலந்த 53 வெற்றிலை சுருள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதை கலந்த வெற்றிலைகளை விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.