யாழ் மாநகரசபைப் பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களுக்கு நடந்த கதி என்ன?

பொது இடங்களில் கழிவுகளை கொட்டிய 5 நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பிரிவினரால் கடந்த வாரம் யாழ் நகரப் பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டிய ஐவர் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்குகள் தொடரப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து ஒவ்வொருவரைம் ஐந்தாயிரம் ரூபாவை தண்டம் செலுத்துமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.