யாழில் புலிகளின் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி டச்சு வீதி மருதடி பகுதியில் தமிழிழு விடுதலைப் புலிகளின் தற்கொலை அங்கியுடன் கூடிய வெடி பொருட்களின் பாகங்கள் சில இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதயில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய்களை தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே அவை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பனும் மீட்கப்பட்டவை மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டவை என்றும், அவை உக்கிய நிலையில் காணப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், அது தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.