யாழில் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் கிட்டு நினைவு தினம் ?

யாழில் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் கிட்டு நினைவு தினம் ?

‘யாழ்ப்பாணம் ஜனாதிபதி வருகிறார்’; ‘ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்’; ‘ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம்’ என்பன செய்திகளாக வந்தவை. இதன் பின்னால் அரங்கேறிய அரசுக்கு எதிராக தொழில்ப்படும் உளவுத்துறை விடயங்களை நாம் பகிரங்கப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். 

தைபொங்கல் தினத்தை யாழில் நடத்துவதை அரசுக்கு எதிராக தொழில்ப்படும் உளவுத்துறை வெற்றிலை கும்பல் விரும்பவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சருடன் ஒன்றாக இணைந்து யாழில் பொங்கல் விழா கொண்டாடுவதும் அந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைவதும் நல்லாட்சியை விரும்பாத ஒரு அரசுக்கு எதிராக தொழில்ப்படும் உளவுத்துறை கும்பல் குழப்ப விரும்பியது. 

முதலாவதாக ஜனாதிபதியை நிகழ்வில் இருந்து கழற்ற வேண்டும். அப்படியானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது கல்லெறியும்போது ஜனாதிபதியை தடுக்கலாம் என்பது அரசுக்கு எதிராக தொழில்ப்படும் உளவுத்துறைக்கு நன்கு தெரியும். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நிகழ்வில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்க வேண்டுமாக இருந்தால், இலங்கை உளவுத்துறையால் இயக்கப்படும் ‘புலி’ வேடம் போட்டு தமது உளவுத்தேவைகளுக்காக புலி ஆதரவாக காட்டி கொண்டு நடத்தபடும் ‘பதிவு இணையம்’  ஊடாகவும் புலம்பெயர் அமைப்புகள் சார்பில் தைப்பொங்கல் தினத்தை பகிஸ்கரிக்குமாறு முதலில் அரசுக்கு எதிராக தொழில்ப்படும் உளவுத்துறை அறிக்கை வெளிவந்தது. அதாவது, இலங்கை உளவுத்துறை பதிவு இணையம் ஊடாக தைப்பொங்கல் விழாவைத் தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டனர். 

பலாலி இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் ஒற்றனாக செயற்படும் PATHIVU இணைய ஆசிரியர் தயாபரன்.

பலாலி இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் ஒற்றனாக செயற்படும் PATHIVU இணைய ஆசிரியர் தயாபரன்.

அதன் தொடர்ச்சியாக ரணிலுக்கு எதிரான ஊடகத்தில் கொழும்பு புறக்கோட்டைத் தெரு வியாபாரி துவாரகேஸ்வரனினால் இராணுவப் புலனாய்வுத் தகவல் என தெரிவித்து ‘ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்’ என்று ஒரு வதந்தியை தைப் பொங்கல் நிகழ்வுக்கு எதிரான வெற்றிலை கட்சியால் இயக்கப்படும் இலங்கை உளவுத்துறையால் திட்டமிட்டுப் பரப்பட்டது.

தைப்பொங்கல் நிகழ்வுக்கு எதிரான வெற்றிலை கட்சியால் இயக்கப்படும் இலங்கை உளவுத்துறையால் திட்டமிட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று யாழ் குடாநாட்டில் தைபொங்கல் தினத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிபடையின் நடவடிக்கைகளை தீவிரபடுத்தி மக்களை முடக்குவதற்குரிய வேலைகளை செய்தனர்.     யாழ் குடாநாடு எங்கும் இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குள் இருந்துகொண்டு நல்லாட்சிக்கு எதிராக செயற்படும் அனந்தி, சிவாஜிலிங்கம், குதிரை கஜன் ஆகியோரை தை பொங்கல் தினத்திற்கு ஜனாதிபதி வரக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டி விட்டனர். இதன் ஊடாக புலிகளும் புலம் பெயர்ந்த புலிகளும் ஜனாதியின் யாழ் வருகையை எதிர்ப்பதாக போலியான மாயை ஒன்றை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு காட்டியது தைப்பொங்கல் நிழ்வுக்கு எதிரான வெற்றிலை கட்சியால் இயக்கப்படும் உளவுத்துறை.

வல்வெட்டித்துறையில், ‘பட்ட திருவிழா’ என்று ரணிலின் தைப்பொங்கல் தினத்தை திசை திருப்பி,  நல்லாட்சிக்கு எதிரானவர்களை வைத்து கேணல்.கிட்டுவின் 23ஆவது வருட நினைவு தினத்தை ‘பட்ட திருவிழா’ என்று புலிகளின் கடற்படை பயிற்சி நடக்கும் மைதானத்தில் கொண்டாட இலங்கை உளவுத்துறைக்குள் இருக்கும் ரணிலுக்கும் நல்லாட்சிக்கும் எதிராக செயற்படும் வெற்றிலை கட்சியால் இயக்கப்படும் குழுவால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  

இதற்குரிய ஊடக அனுசரனையை தற்போது இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் நந்தகோபனால் இயக்கப்படும் புலி ஆதரவு வேடம் போட்ட இணையங்கள் கொடுத்தன. 

வல்வெட்டித்துறை கிட்டு நினைவு தினத்தை இலங்கை முழுக்க பரப்பி ரணிலின் யாழ்ப்பாண தைப்பொங்கல் தினத்தை மழுங்கடிக்க ரணிலுக்கு எதிராக செயற்படும் வெற்றிலை கட்சியால் இயக்கப்படும் மைத்திரிக்கு கொலை அச்சுறுத்தல் என்று துவாரகேஸ்வரனை வைத்து புரளி கிழப்பிய  மகாராஜா நிறுவனத்தின் ‘சக்தி’ வானொலி, தீவிர வானொலி அனுசரனையை வல்வெட்டித்துறை நிகழ்வுக்கு கொடுத்து கொண்டு இருந்தது. 

யாழில் நடந்த தைப்பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி மட்டும் இல்லை வெற்றிலை கட்சி சார்ந்த அங்கஜன் இராமநாதன் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்ற உத்தரவு அவர்களுக்கு கிடைத்திருந்தது.