முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு - பல வீடுகள் சேதம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று இரவு RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பினால் அருகில் இருந்த பல வீடுகள் சேதடைந்துள்ள போதிலும், யாரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களினால் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டில் குப்பை சேகரித்து அதற்கு தீ வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் பாரிய சத்தம் ஒன்று கேட்டுள்ள நிலையில் குண்டு வெடித்துள்ளது

எப்படியிருப்பினும் குண்டு வெடிக்கும் சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.