யாழில் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் குடும்பப் பெண் குழந்தைகளுடன் ஆஸ்பத்திரியில் தஞ்சம்!!

வாள்­வெட்­டுக்கு இலக்­கான 35 வய­து­டைய குடும்­பப் பெண் தனது இரு குழந்­தை­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று யாழ்ப்­பா­ணம் சாவ­கச்­சே­ரி­யில்  இடம்­பெற்­றுள்­ளது.சாவ­கச்­சேரி கிராம்­பு­வி­லைச் சேர்ந்த 35 வய­து­டைய குடும்­பப்  பெண், தன்னை தனது கண­வன் மோச­மா­கத் தாக்­கி­ய­து­டன் வாளால் தலை­யில்  தாக்­கி­ய­தா­கக் கூறி மருத்­து­வ­ம­னைக்கு வந்து தனக்­கும் தனது பிள்­ளை­க­ளுக்­கும்  உயி­ரா­பத்து ஏற்­ப­டா­தி­ருக்க பாது­காப்பு வழங்­க­மா­றும் கோரி­யுள்­ளார் என­வும்  தெரி­விக்­கப்­பட்­டது.

இரவு மது­போ­தை­யில் வீட்­டுக்கு வந்த கண­வன் தன்னை காலை­வரை மிரு­கத்­த­ன­மா­கத்  தாக்­கி­னார் என­வும் கூரிய ஆயு­தத்­தால் தலை­யில் தாக்­கி­னார் என­வும்  முறை­யிட்டுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.