யாழில் உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தரின் திருவிளையாடல் இது!

உள்ளூராட்சி தேர்தல்கள் முடிந்து, எந்த கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை இன்றி  இருப்பதால், யார் முதல்வராக வருவது என்பது அறியப்படாத நிலையில் உள்ளது.

இந் நிலையில் யாழில் முக்கிய உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தர் ஒருவரின் திருவிளையாடல் ஒன்று நேற்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது.   குறித்த உத்தியோகத்தருக்கு கடந்த வருடம் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் வந்துள்ளது.  குறித்த இடமாற்றம் தேர்தல் அறிவிப்பால் பிற் போடப்பட்டிருந்தது. அந்த உத்தியோகத்தர் நேற்று மாலை சபைக்கு தலைவராக வருவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளதாக நோக்கப்படும் இரு கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்த இரு முக்கியஸ்தர்களுக்கும் தொடர்பை எடுத்து அவர்களை வாழ்த்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் தனித்தனியே மாறி மாறி மற்றைய முக்கியஸ்தரைப் பற்றி ஆளுமை இல்லாதவர் எனவும் தெரிவித்திருந்தார். ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரும் தலைமைப் பதவிக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள நிலையிலே குறித்த அரச அலுவலர் இவ்வாறு ‘டபிள்கேம்‘ விளையாட்டை நடாத்தி முடித்துவிட்டு தனக்கு வெளிமாவட்டத்துக்க இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் வந்தவுடன் நிறுத்தினால் நான் உங்களுடன் விசுவாசமாக செயற்படுவேன் எனவும் தெரிவித்தாராம்.

தேர்தலில் வென்ற குறித்த கட்சி முக்கியஸ்தர்கள் இருவரையும் குறித்த அலுவலர் தொடர்பு கொண்டு வாழ்த்திய விடயம் அவ்விருவர்களூடாகவும் கட்சி ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததாம். அதன் பின்னர் குறித்த அலுவரின் இரட்டை வேடம் வெளியாகியதாக தெரியவருகின்றது. இதே வேளை இன்னொரு கட்சியில் போட்டியிட்டு குறித்த சபைக்கு தெரிவாகிய முக்கியஸ்தருக்கும் குறித்த அலுவலர் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்திய பின்னர் இடமாற்றம் தொடர்பாக தெரிவித்து திருவிளையாடல் புரிந்தமையும் தெரியவந்துள்ளது.