குப்பிளானின் சீட்டுக் குலுக்கல் மூலம் வெற்றி பெற்ற தமிழ் காங்கிரஸ்

வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தன.

இதனால், தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அதிகாரிகள், சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவை அறிவித்தனர்.

சீட்டுக் குலுக்கலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.