மேலதிக இணைப்பு: கிளிநொச்சியில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி 21445
சுயேட்கைக்குழு 14489
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2433
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 1899
ஐக்கிய தேசியக் கட்சி 1570 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 61315
அளிக்கப்பட்ட வாக்குகள் - 46028
நிராகரிக்கப்பட்டவை - 1030
செல்லுபடியான வாக்குகள் - 44998
1ஆம் இணைப்பு
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில். கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.
பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.
பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.