யாழில் காணாமல்போனோர் உயிருடன் இல்லை - உத்தியோகபூர்வ அறிவிப்பு.

யாழில் காணாமல்போனோர் உயிருடன் இல்லை - உத்தியோகபூர்வ அறிவிப்பு.

காணாமல்­போனோர் தொடர்­பான எமது பட்­டி­யலில் காணப்­ப­டா­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­வர்­களில் பெரு­ம­ள­வானோர் உயி­ருடன் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இல்­லை­யென்றே கரு­தப்­ப­ட­ வேண்­டி­யுள்­ள­ தென்­பதை மிகவும் கவ­லை­யுடன் கூறு­கின்றேன் என்று பிர­தமர் குறிப்­பிட்டார். யாழில் நடை­பெற்ற தேசிய தைப் ­பொங்கல் நிகழ்வில் பிர­தம அதி­தி­யா­க­லந்­து­கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தெற்கில் என்னை திட்­டு­வார்­களோ தெரி­ய­வில்லை. இருப்­பினும் நான் ஒரு விட­யத்தை இங்கு கூறு­கின்றேன். கொழும்பில் தேசிய தைப்­பொங்கல் தினத்தை கொண்­டா­ட­மு­டி­யாது. காரணம் அங்­குள்­ள­வர்கள் வெளிப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­று­வி­டு­வார்கள். ஆகவே தான் யாழில் இந்த நிகழ்வை முன்­னெ­டுப்­ப­தற்கு முடி­வெ­டுத்­தி­ருந்தோம். 

ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துப்பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறந்த சூழல் உருவாக்கப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்றார்.

யாழில் காணாமல்போனோர் அவருடைய உறவினர்கள் தமது உறவுகள் இறந்துவிட்டதாக சமய சாந்திகளை செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய உரிய சமய மத அனுஸ்டானங்களில் ஈடுபடுமாறு மறைமுகமாக தெரிவித்த பிரதமர் றணில் விக்ரமசிங்க இனியும் இவர்களை தேடி அலைய வேன்டாம் என்று மறைமுகமாக தெரிவித்ததுடன் இதை வைத்து அரசியல் செய்வது நிறுத்தபடவேண்டும் என்பதனை சுட்டிக்காட்டினார்.