யாழ் உரும்பிராயில் 14வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த சித்தியால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் பாடசாலை செல்லும் 14 வயதுடைய பெறமகன் மீது சித்தியார் துபிரயோகம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

சிறு குழப்படி ஒன்றிக்காக அவர் சிறுவன் மீது வயரினால் கடுமையாக தாக்கியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சட்டவைத்திய அதிகாரியின் மருத்து அறிக்கைக்கு காத்திருக்கும் பொலிஸார் மேலதிக விசாரணையின் பின்னர் சித்தியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுவர்கள் மீது தடியால் அடிப்பது கூட துஸ்பிரயோகம் என சட்டம் பரிந்துரைக்கின்றது . இவ்வாறு இருக்கும் போது பிறிதொரு மகன் மீது வயரினால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது