மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற கிளார்க்! அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இன்றைய 2வது ஒருநாள் போட்டியின் போது ஓட்ட பலகையில் ஏற்பட்ட ஒரு தவறு அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியின் போது ஓட்ட பலகையில் அவுஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பின்னர் சில நிமிடங்களில் அந்த தவறு சரி செய்யப்பட்டது.

இது தொடர்பாக நிருபர் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்த கிளார்க், "முடியாது என்று எப்போதும் கூறாதே" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Huge breaking news @MClarke23 making a shock comeback for Australia at Gabba today! pic.twitter.com/JOMib6UY3F

— Ben Dorries (@Dorries_cmail) January 15, 2016

Never say never.. Hahaha. Love the GABBA https://t.co/dRdq8s4S11

— Michael Clarke (@MClarke23) January 15, 2016