அவுஸ்திரேலியாவில் தடுமாற்றம்: மன்னிப்பு கேட்ட குமார் சங்கக்காரா

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 105 ஓட்டங்களே எடுத்தார். அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதால் சங்கக்காரா வீரர்களிடம் மன்னிப்பு கோரியதாக அந்த அணியின் பயிற்சியாளர் டாமின் ரைட் தெரிவித்துள்ளார்.

மேலும், சங்கக்காரா பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி வருவார் எனவும், அடுத்த சீசனில் அதிரடியில் அவர் மிரட்டுவார் என்றும் டாமின் ரைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.