நான் மரணத்தை பார்த்த தருணம்: சச்சினின் திரீல் அனுபவம்

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்திய துடுப்பாட்ட முன்னாள் வீரரும் நட்சத்திர ஆட்டக்காரருமான சச்சின் டெண்டுல்கர் மும்பை ரயில்வே பொலிசார் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, எனக்கு 11 வயது இருக்கும்போது ரயில்களில் பயணம் செய்துள்ளேன்.

நிற்க கூட இடமில்லாமல் நெரிசலான மக்கள் கூட்டத்துக்கு இடையே பயணித்த அனுபவம் எப்போதும் என்னோடு இருக்கும்.

அதேபோன்று பள்ளியில் படிக்கும் போது நாங்கள் நண்பர்கள் 5 அல்லது 6 பேர் விளையாட செல்வோம்.

ஒரு நாள் விளையாடிவிட்டு வரும் போது நேரமாகிவிட்டதால் ரயில் தண்டவாளத்தை கடந்துசெல்ல முயன்றோம்.

பாதி கடந்தபின் தான் அனைத்து தண்டவாளத்திலும் ரயில்கள் வருவதை பார்த்தோம்.

இதனால் பயந்துபோன நாங்கள் எங்களின் துடுப்பாட்ட கருவிகளை பயன்படுத்தி தண்டவாளங்களுக்கு நடுவில் பதுங்கிகொண்டோம்.

அந்த நிகழ்வுக்கு பின்னர் நாங்கள் தண்டவாளத்தை கடந்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.